நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தாநேபாள பிரதமர் ஆகிறார்

நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தாநேபாள பிரதமர் ஆகிறார்

நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தாநேபாள பிரதமர் ஆகிறார்

காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் பதவிக்கு, நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா போட்டியிடுகிறார். நேபாள பிரதமராக பதவி வகித்து வந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.ஒலி கடந்த மாதம் 24ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என அதிபர் பித்யா தேவி பண்டாரி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பணி இன்று தொடங்குகிறது.

596 எம்பிக்களை கொண்ட நாடாளுமன்ற கூட்டத்தை சபாநாயகர் அன்சாரி கார்த்தி இன்று கூட்டுகிறார். இதையொட்டி நேபாளி காங்கிரஸ் தலைவர் சேர் பகதூர் டேபா புதிய பிரதமர் வேட்பாளராக பிரசந்தாவை நேற்று முன்மொழிந்தார். இதையடுத்து அவர் தனது ேவட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருக்கு 3 மாதேசி தலைவர்களான உபேந்திர யாதவ், சர்வேந்திரா நாத் சுக்லா மற்றும் லட்சுமண் லால் கர்ணா ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்த 3 மாதேசி கூட்டணியின் 39 எம்பிக்கள் ஆதரவுடன் பிரசந்தா பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. பிரதமர் தேர்தலில் சிபிஎன் யுஎம்எல் கூட்டணி போட்டியிடவில்லை. ஆனால் அவர்கள் பிரசந்தாவுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். பதவி விலகிய ஒலியின் கட்சி முக்கிய எதிர்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>