நேபாளம் முழுவதும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு 80 பேர் உயிரிழப்பு

நேபாளம் முழுவதும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு 80 பேர் உயிரிழப்பு

நேபாளம் முழுவதும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு 80 பேர் உயிரிழப்பு

 

 

நேபாளம் முழுவதும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு 80 பேர் உயிரிழந்தனர்.

நேபாளம் முழுவதும் கடந்த திங்கள் கிழமை முழுவதும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. நேபாளத்தின் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது. நாடு முழுவதும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற விபத்து சம்பவங்களில் 80 பேர் பலியாகினர் என்றும் 43 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலர் காயம் அடைந்து உள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு உள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள 14 மாவட்டங்களில் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை ராணுவமும், சமூக ஆர்வலர்களும் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>