நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு: 172 மாணவ, மாணவிகளுக்கு இருதயத்தில் குறைபாடு 47 பேருக்கு சென்னையில் ஆபரேஷன்

நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு: 172 மாணவ, மாணவிகளுக்கு இருதயத்தில் குறைபாடு 47 பேருக்கு சென்னையில் ஆபரேஷன்

நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு: 172 மாணவ, மாணவிகளுக்கு இருதயத்தில் குறைபாடு 47 பேருக்கு சென்னையில் ஆபரேஷன்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 172 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இருதய செயல்பாட்டில் குறைபாடு இருப்பது நேரடி ஆய்வில் கண்டறியப்பட்டது. இருதயத்தில் அதிக பாதிப்புள்ளவர்களுக்கு சென்னையில் ஆபரேஷன் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் சங்கரன்கோவில் சுகாதார நலத்துறை சார்பில் தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் இருதய நலன் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் 19 வட்டாரங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இருதய பரிசோதனை குறித்து நடமாடும் 38 மருத்துவக்குழுவினர் கடந்த 6 மாதங்களாக நேரடியாக ஆய்வு செய்தனர்.

இதில் 172 மாணவ, மாணவிகளுக்கு இருதய செயல்பாட்டில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் அனைவருக்கும் அதிநவீன கருவிகள் மூலம் கூடுதல் பரிசோதனை முகாம் நேற்று நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்டது. நெல்லை மற்றும் சங்கரன்கோவில் சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ் முன்னிலையில் நடந்த இந்த முகாமில் சென்னை ஐஸ்வர்யா அறக்கட்டளை இருதயநோய் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் அருள் நாராயணன், டாக்டர் சுவாமி, டாக்டர் கணபதி மற்றும் நெல்லை மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அனுஜயா மாவட்ட அலுவலர்களான டாக்டர்கள் சரவணபிரகாஷ், முத்துராமலிங்கம், ஆரீப் உதுமான் முகைதீன் மற்றும் அன்புசெல்வன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துசாமி உள்ளிட்ட 20 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் காலை முதல் மாலை வரை 136 மாணவ, மாணவிகளுக்கு எக்கோ உள்ளிட்ட பல்வேறு இருதய பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் ஓரளவு குறைபாடு உடைய 25 பேர் தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் அதிக பாதிப்புள்ள 47 பேருக்கு சென்னையில் ஆபரேஷன் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாணவரின் இருதய அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூ.1.25 லட்சம் செலவாகும். இத்தொகையை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் ஐஸ்வர்யா டிரஸ்ட் ஆகியவை இணைந்து செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை துணை இயக்குனர் ராம்கணேஷ் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>