நெல்லை எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்திக்காக 10 ஆயிரத்து 8 ஓவியப் பானைகள்

நெல்லையை அடுத்த அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் நடைபெறும் விழா மிகவும் வித்தியாசமானது. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாஅன்று மண் பானைகளில் விதவிதமான பதார்த்தங்கள் படைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதன் முறையாக 25 பானைகளை வைத்து நடைபெற்ற பூஜை பின்னர் 108, 1008, 3008, 5008, 7008 என்று அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு முதன்முறையாக 10 ஆயிரத்து 8 பானைகளைக் கொண்டு பூஜைகள் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே இக்கோயிலில் மட்டும்தான் வண்ணப்பானைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

நெல்லையை அடுத்த அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் நடைபெறும் விழா மிகவும் வித்தியாசமானது. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாஅன்று மண் பானைகளில் விதவிதமான பதார்த்தங்கள் படைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதன் முறையாக 25 பானைகளை வைத்து நடைபெற்ற பூஜை பின்னர் 108, 1008, 3008, 5008, 7008 என்று அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு முதன்முறையாக 10 ஆயிரத்து 8 பானைகளைக் கொண்டு பூஜைகள் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே இக்கோயிலில் மட்டும்தான் வண்ணப்பானைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

நெல்லை: இந்தியாவிலேயே முதன்முறையாக நெல்லை அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக அழகழகாய் ஓவியங்கள் வரையப்பட்ட 10 ஆயிரத்து எட்டு பானைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு பானையையும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கும் பணியில் ஓவியர்கள், தன்னார்வ பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. அவற்றில் நெல்லையை அடுத்த அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் நடைபெறும் விழா மிகவும் வித்தியாசமானது. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாஅன்று மண் பானைகளில் விதவிதமான பதார்த்தங்கள் படைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதன் முறையாக 25 பானைகளை வைத்து நடைபெற்ற பூஜை பின்னர் 108, 1008, 3008, 5008, 7008 என்று அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு முதன்முறையாக 10 ஆயிரத்து 8 பானைகளைக் கொண்டு பூஜைகள் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே இக்கோயிலில் மட்டும்தான் வண்ணப்பானைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்த மறுநாளே அடுத்த ஆண்டிற்கான பானைகள் தயாரிக்கும் பணியை கோயில் குழுவினர் துவங்குகின்றனர். நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுடலை குடும்பத்தினர் சிறிய ரக 9 ஆயிரம் பானைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். பரப்பாடியைச் சேர்ந்தவர்கள் 1008 பெரிய ரக பானைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். பானைகள் தயாரானதும் கிருஷ்ண ஜெயந்திக்கு இரண்டு மாதங்களுக்கு முன் அவை கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இங்குள்ள எட்டெழுத்துப் பெருமாள் தர்மபதி கோசாலையில் அவை பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. பானைகளை அலங்கரிப்பதற்காக சுமார் 300 லிட்டர் பல வண்ண பெயின்ட்கள் வாங்கப்படுகின்றன. இதையடுத்து காது கேளாத, வாய் பேச இயலாத மூத்த ஓவியர் நெல்லை மாலையப்பன், ஓவியர்கள் வின்சென்ட் செல்வராஜ், மணி, சின்னத்துரை, கோயில் தன்னார்வ பெண்கள் குழுவினர் பானையில் ஓவியம் வரையும் பணியை துவங்குகின்றனர். ஒவ்வொரு பானையும் ஒவ்வொரு விதமாக பெயின்ட் அடிக்கப்படுகிறது. இதையடுத்து ஓவியர்கள் ஒவ்வொரு பானையிலும் ஒவ்வொரு விதமாக படம் வரையத் துவங்குகின்றனர். 10 ஆயிரத்து எட்டு பானைகளும் ஒன்றுபோல் காட்சியளிக்காமல் ஒவ்வொன்றும் தனித்தனியாக காட்சியளிக்கும்படி விதம் விதமாக படங்கள், சின்னங்கள் வரையப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் குழுவைச் சேர்ந்த 5 பேர் லப்பம், மணலைப் பயன்படுத்தி பானைகளின் மீது சிறப்பு வடிவங்களை தயாரிக்கின்றனர். பின்னர் அவற்றில் வண்ணம் தீட்டப்படுகிறது. பெரிய பானைகளில் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாரானது போல் சிற்பங்கள், ஓவியங்கள், படங்கள் கைகளாலேயே வரையப்படுகின்றன. ஒற்றுமை, இயற்கையை வலியுறுத்தும் விதமாக பல ஓவியங்கள் வரையப்படுகின்றன. பானைகள் அனைத்தும் தயாரானதும் அவற்றில் கிருஷ்ண ஜெயந்திக்கு முதல் நாள் இரவு பலகாரங்கள் நிரப்பப்பட்டு அவை பூஜைக்கு வைக்கப்படுகின்றன. கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் முதல் பக்தர்களுக்கு அவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>