நெய்வேலி சுரங்கத்திலிருந்து நீர் எடுத்து செல்ல விவசாயிகள் எதிர்ப்பு

|
Jakkamma News

நெய்வேலி: விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் நெய்வேலி சுரங்கத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்து வரும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வினாடிக்கு 100 முதல் 380 கனஅடி வரை வெளியேறும் நீர், ராட்சத மோட்டார்கள் மூலம் சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டத்தால் விவசாயத்திற்கு நீர் கிடைக்காமல் தாங்கள் பாதிக்கப்படுவதாக நெய்வேலி சுற்றுவட்டார விவசாயிகள் தெரிவித்துள்ளனர், எனவே தங்களது நிலம் பாலைவனமாக மாறுவதை தடுக்க சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீர் வாலாஜா ஏரிக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து பரவனாற்றுக்கு திருப்பி விடப்படும் நீரை, பெரிய தொட்டிகளில் தேக்கி, வீராணம் திட்டக் குழாய் வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் வாலாஜா ஏரியை சுற்றியுள்ள வடலூர், குறிஞ்சிப்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்திற்கு சரி வர நீர் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. வீராணம் ஏரி வறண்டு கடப்பதால் அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஆதலால் நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை எடுத்து செல்லும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது எழுந்துள்ள விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை நகரில் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>