நெடுவாசல் போராட்டத்தை சில அரசியல்வாதிகள் தூண்டிவிடுகின்றனர்: தமிழிசை

tamilisai_3034344f

மத்திய அரசு மாநில நலனுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாது என்று கூறியும் தமிழக அரசியல்வாதிகள் சிலர் நெடுவாசல் போராட்டத்தினை தூண்டிவிடுகின்றனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது,”நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் விரும்பவில்லை என்றால் மத்திய அரசு அத்திட்டத்தை செயல்படுத்தாது என்று அறிவித்துள்ளது.

இருப்பினும் சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடும் நோக்கில் நெடுவாசலில் போராட்டத்தினைத் தூண்டி விடுகின்றனர். மக்களை பயமுறுத்துகின்றனர்” என்றார்.

மேலும் நெடுவாசல் போராட்டம் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை கூறும்போது, ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயத்துக்கு தீங்கானது என்று நெடுவாசல் மக்கள் நினைத்தால் அந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது. மக்களுக்கு இத்திட்டம் குறித்த சந்தேகத்தை விளக்கும் நிபுணர்களை சில குழுக்கள் மக்களை சந்திக்கவிடாமல் தடுக்கின்றனர் ” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் குற்றசஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வடகாடு, நெடுவாசல், கோட்டைக் காடு, கருக்காகுறிச்சி, வாணக் கன்காடு ஆகிய இடங்களில் ஆழ் துளைக் கிணறு அமைத்து எரி பொருள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க பிப்.15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.

விவசாயம் நிறைந்த, டெல்டா பகுதியாக உள்ள இப்பகுதியில் இயற்கை எரிவாயு எடுத்தால் சோலைவனமாகக் காட்சி அளிக்கும் இப்பகுதி பாலைவனமாக மாறும். இங்கு வசிப்போர் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், நோய் பாதிப்பு ஏற்படும்.
எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி கடந்த 16-ம் தேதி முதல் நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நெடுவாசலில் ஆலமரத்தடியில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் நெடுவாசல் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராம மக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>