நெடுவாசல்மக்கள் போராட்டம்: ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி

unnamed (1)

நெடுவாசல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதையடுத்து நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீவிர முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளனர். நெடுவாசல் போராட்டம் இன்றுடன் 17வது நாளை எட்டியது. இந்நிலையில் நெடுவாசல் போராட்டக்குழு இன்று மாவட்ட ஆட்சியர் கணேஷை சந்தி்த்து பேச இருக்கிறது. பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை அக்குழுவினர் சந்திக்கின்றனர். அதன் பின் மத்திய பெட்ரோலியத்துறை தர்மேந்திர பிராதனை ஓரிரு நாட்களில் போராட்டக்குழு சந்தித்து திட்டத்தை கைவிட வலியுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பிராதான எதிர்க்கட்சியான திமுக எதிர்த்துள்ளதையடுத்து, காங்கிரசும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு, கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் இளைஞர்கள், மாணவர்கள் நெடுவாசலை நோக்கி வருவதை தடுக்க அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டைப் போல் இந்த போராட்டமும் விஸ்வரூபம் எடுப்பதை தடுப்பதற்கான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு தரப்பு ஈடுபட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>