நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற மறுத்தால்கல்லூரி மாணவிபாலியல் பலாத்காரம் செய்தனர்

நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற  மறுத்தால்கல்லூரி மாணவிபாலியல் பலாத்காரம் செய்தனர்

நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற மறுத்தால்கல்லூரி மாணவிபாலியல் பலாத்காரம் செய்தனர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புதுடெல்லி: ஹரியானா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை 3 ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் மீண்டும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே உள்ள ரோதக் நகரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த 5 பேர் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர் மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இளம் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞர்களை தேடி வருகின்றனர்.

தப்பியவர்கள் ஐந்து பேரும் ஜாமீனில் வெளியே இருக்கும் உயர்சாதி ஆண்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த பெண்ணை 5 இளைஞர்கள் 2013 ம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் வழக்கை வாபஸ் பெறும்படி அந்த இளைஞர்கள் பெண்ணின் குடும்பத்தை மிரட்டி வந்துள்ளனர்.

ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு , அந்த ஜந்து பேரின் குடுபத்தினர் அனைவரும், ஒரு சமரசத்திற்கு வந்தனர்.

வழக்குகளை திரும்ப பெற சொல்லி 50 இலட்சம்தருவதாக கூறினார்கள்

 

*   ஹரியானா மாநிலத்தில் ஒரு வருடத்திற்கு 733 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்நடைபெறுவதாக இந்தியாவின் தேசிய குற்றபதிவியல் ஆணையம் கூறுகிறது. சராசரியாக, ஒரு மாதத்தில் 61 பெண்கள் ஏதோவொரு வகையிலான பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>