நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிடில் அவமதிப்பு வழக்கு : மாநில தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை

Madras-High-Court-in-Chennai-Milei.vencel-wikimedia

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்தை, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் தாங்கள் குறிப்பிட்ட மே மாதம் 14-ம் தேதிக்குள், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றத்தை அவமதித்ததாக கருதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணையத்தை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க கோரி மாநில தோ்தல் ஆணையம் இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டியது இருப்பதால், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி காரணமாக வரும் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தோ்தலை நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஆணையம் கேட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பலமுறை உத்தரவிட்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன் என வினவியது. அனைத்து நிர்வாகத்திலும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள், நீங்கள் ஏன் உச்சநீதிமன்றத்தை அணுக கூடாது என மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பிடம் வினவியது. மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து தனி மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. பின் வழக்கு விசாரணையை ஒருவாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>