நீண்ட ஆயுளும் அழகான பொலிவும் தரும் காலை உணவு

breakfast_22358

பத்து மணி ஆபிசுக்கு ஒன்பது மணிக்கு எழுந்துகொள்வதும், பரபரப்பாக கிளம்பி ஓடுவதும் இன்றைக்கு சகஜமாகி விட்டது. கடிகாரம் விரட்டும் இந்த விளையாட்டில் காலை உணவு என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். ஒருவேளை கிள்ளும் வயிறு அதை ஞாபகப்படுத்தினாலும் ஏதோ ஜூஸ், கொஞ்சம் ஓட்ஸ் என எதையோ திணித்து பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். ஆனால், காலை உணவு கட்டாயம் என்று மருத்துவம் கடுமையாக எச்சரிக்கிறது. இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதால்தான் காலை உணவை பிரேக் ஃபாஸ்ட் அதாவது விரதத்தை உடைப்பது என்றே பெயரிட்டுச் சொல்கிறோம். காலை உணவு சாப்பிடுபவர்கள் மட்டுமே நாள் முழுதும் வேகமாக செயல்படுவதோடு மனஅழுத்தம் இன்றி மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கிறது.

காலை உணவு

இரவு உண்ட உணவு செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. இந்த குளுகோஸ் கல்லீரலிலும் தசைகளிலும் கிளைகோஜனாக மாறி தங்குகிறது. இரவு முழுக்க உள்ளுறுப்புகளை இந்த சக்தி இயக்குகிறது. இதனால், காலையில் இந்த கிளைகோஜன் தீர்ந்து விடுகிறது. இதனால், இழந்த சக்தியை மீண்டும் பெற காலையில் ப்ரோட்டீன், மாவுச்சத்து, விட்டமின்கள் அடங்கிய உணவை எடுத்துக்கொள்வது கட்டாயம். எளிதில் ஜீரணமாகும் உணவை விட நார்ச்சத்து கொண்ட உணவை காலையில் சாப்பிட்டால் அது உடனே செரிமானம் ஆகாமல் அந்த நாள் முழுக்க சக்தியை கொடுக்கும். கோதுமை ரொட்டி, கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, பிரெட் சான்ட்விச், உப்புமா, கொழுப்புச் சத்து குறைந்த பால், பயறு வகைகள், முட்டை, கேழ்வரகு அடை, தயிர், மோர், மக்காசோளம், பழங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்வது சிறந்த காலை உணவாக இருக்கும்.

‘நான் டாக்டர் ஆகணும்… அப்பா…’ தந்தையிடம் சிகிச்சைக்குப் பணம் அளிக்கக் கேட்டு மன்றாடிய 13 வயது சிறுமியின் குரல்…

பஞ்சர் ஆனாலும் பறக்கும்!
சர்க்கரை வியாதி வராமல் இருக்கவும், மயக்கம், மன அழுத்தம், சோர்வு, தலைவலி, மூட்டு வலிகள் வராமல் இருக்கவும், காலை உணவு அவசியமானது. காலை உணவை எடுத்துக்கொள்வதால் உடல் எடை சீராகவும் இருக்கிறது. நீண்ட ஆயுளும், அழகான பொலிவையும் காலை உணவு அளிக்கிறது என்று மருத்துவர்களும் உறுதி செய்கிறார்கள். எனவே எது நடந்தாலும் சரி, இனி காலை உணவை தவிர்க்கவே தவிர்க்காதீர்கள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>