நீட் : நீட்டுக்கு எதிராக அரசியல் கட்சிகள், தனிநபர் யாராக இருந்தாலும் போராட்டம் நடத்த தடை: உச்சநீதிமன்றம்

neet

டெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வகுப்பு புறக்கணிப்பு சாலை மறியல் உள்ளிட்ட எந்தவித போராட்டங்களும் நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும் என்பதால் எந்தவித போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்னைகளை அரசு கையாள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பதிலளிக்க தமிழக தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் ஆகியோர் செப்டம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>