நீட் தேர்வில் விலக்கு கோரி இன்று தமிழகம் முழுவதும் திமுக மனிதசங்கிலி போராட்டம்!

2017-27-07-09-59-38

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பங்கேற்க உள்ளனர்.

சேலத்தில் நடக்கும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திமுகவின் மனிதசங்கிலி போராட்டத்திற்கு எதிரான மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, அறிவித்தபடி இன்று மனிதசங்கிலி நடத்தப்பட உள்ளது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு காவல் துறை சார்பில் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>