நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்துக்கு எதிராக மோடி அரசு

2017-23-2--14-18-03

டெல்லி: நீ்ட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் மாநில அரசின் தீர்மானத்தை, மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. M.B.B.S மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி சட்டப்பேரவையில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவை உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அதிகாரிகள் நேற்று வழங்கினர்.

இந்நிலையில் தமிழக அரசு தனது பொறுப்பினை தட்டிக்கழிக்கும் வகையில், நீட் தேர்வு தொடர்பான மசோதாவை நிறைவேற்றி அனுப்பியுள்ளதாகவும், இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பது கடினம் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வை பொறியல் படிப்பிற்கும் அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் மசோதாவை மத்திய அரசு ஏற்க வாய்ப்பே இல்லையென அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். மத்தி அரசின் ஒப்புதல் இல்லாமல் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனிடையே மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>