நிறம், திடம், சுவை…ஆர்.ஆர்.தயாநிதி

நிறம், திடம், சுவை...ஆர்.ஆர்.தயாநிதி
நிறம், திடம், சுவை.. (இதுவெண்மை புரட்சியின் சாயம் ) ஆர்.ஆர்.தயாநிதி


தூங்கி எழுந்ததும் நீசத் தண்ணீர் குடித்து, வேப்பங்குச்சியை மென்றபடியே கம்மாங்கரைக்கு ஒதுங்கி, அப்படியே கழனி வேலைக்கு போய் கொண்டிருந்த வரையில் ஒரு பிரச்சினையும் இல்லை நம்மாளுக்கு. பெட்காபி குடித்து பழகிய பின் அது இல்லாமல் போகும் நாளில், கழிவறைக்கு சென்று எவ்வளவு முக்கினாலும் வேலைக்கு ஆகாமல் போய் விட்டது. காபிக்கும் கக்கூஸுக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டது?

உறவுக்கார ஆண்பிள்ளைகளோடு கல்யாணமாகி போகின்ற வரையில் சகஜமாக விளையாடி திரிந்த பெண்பிள்ளைகள், உயர்நிலை பள்ளிக்கு வரும் முன்னரே வயதுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு, எதிர்பாலின நட்பை சிதைத்து, ஈர்ப்பை உண்டாக்கும் நிலைக்கு எவ்வாறு வந்து சேர்ந்தோம்? ஒரு வாய் காபிக்கும், பெண் பிள்ளைகள் வயதுக்கு வருவதற்குமான தொடர்பு என்ன?

தலை வலியா, டீ குடித்தால் சரியா போயிடும்.. சோர்வாக இருக்குதா, டீ குடித்தால் சுறுசுறுப்பாகிவிடும்.. சாப்பிட கையில் காசில்லையா, ஒரு டீயும் தம்மும் அடிச்சா போதும்.. வீட்டுக்கு உறவினர்கள் வந்துட்டாங்களா, ஒரு வாய் டீ கொடுத்து உபசரிச்சா போதும்..இப்படி நம் வாழ்வில் நீக்கமற நிறைந்துவிட்ட இந்த டீயும், காபியும் 35 வருடங்களுக்கு முன்னால் எங்கிருந்தன?

இந்த சொற்ப காலத்தில் நம் ஊனோடும், உயிரோடும் எப்படி அதனால் கலக்க முடிந்தது? இதற்கெல்லாம் காரணம் அதன் நிறமோ, திடமோ, சுவையோ அல்ல.. அரசியல்..நமக்கே தெரியாமல் அதனுள் நம்மை அடிமைப்படுத்திய அரசியல்..

நாம் அருந்தும் ஒவ்வொரு கப் காபியிலும் இருப்பது சக்கரையும், காபித்தூளுமல்ல.. பன்னாட்டு வியாபாரமும் அதன் சூழ்ச்சியுமே.. எங்கிருந்து தொடங்கியது இந்த அரசியல்.. எதனை நோக்கி நம்மை கொண்டு செல்கிறது இந்த அரசியல்.. பேசுவோம் வாருங்கள்..

( ஒரு கப் தேனீர் மீண்டும் அருந்துவோம்…)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>