நிறம், திடம், சுவை…ஆர்.ஆர்.தயாநிதி

நிறம், திடம், சுவை…ஆர்.ஆர்.தயாநிதி

நிறம், திடம், சுவை.. (இதுவெண்மை புரட்சியின் சாயம் ) ஆர்.ஆர்.தயாநிதி

‘பள்ளிக்கூடம் போற வயசாகுது, பாவி பய இன்னும் பால்குடி மறக்காம இருக்கானேய்யா ‘ என்று மூன்று அல்லது நான்கு வயது குழந்தையை பார்த்து ஊருக்குள் பெரியவர்கள் பேசி கேட்டதுண்டு.

o3m

ஆனால் இன்று நகர்ப்புறங்களில் ‘கொலஸ்ட்ரம் கொடுத்துட்டு, மதர் பீடிங் ஸ்டாப் பண்ணிடலாமா டாக்டர் ?’ என்று சீரியஸாகவே கேட்கும் தாய்மார்களை பார்க்க முடிகிறது.

பெட்டிக்கடை தோறும் பால் பாக்கெட்டுகளும், பல வண்ணங்களில் பால் பவுடர் டப்பாக்களும் தாராளமாய் கிடைக்கையில், இருபது சொச்சம் வயதில் தாய்ப்பால் கொடுத்து எதற்காக அழகை இழக்க வேண்டும் என்று தாய்மார்கள் நினைக்க தொடங்கியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெடுகிறதா என்ற விவாதத்தை ஓதுக்கி வைத்து விட்டு தாய்ப்பாலுக்கும் பாக்கெட் பாலுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்ப்போமா?

Lநசன்

# வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் உண்டாகும் நோய்களிலிருந்து குழந்தைகளை காக்கின்ற ஆன்டிபாடீஸ் எனப்படுகின்ற நோய் எதிர்ப்பு பொருள் தாய்ப்பாலில் தான் உள்ளது. இதனை செயற்கையாக உருவாக்க முடியாது என்பதோடு, அவ்வாறு உருவாக்கினாலும் பாலை கொதிக்க வைக்கும் போது அவை காணாமல் போய்விடும். எனவே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறையும்

# குழந்தையின் தாகத்தை தணிக்க போதுமான அளவு தண்ணீர் தாய்ப்பாலில் சரிவிகிதத்தில் இருக்கிறது. பாக்கெட் பாலை கொதிக்கவைக்கும் போது நீரை சரிவிக்கத்தில் கலந்து கொடுக்கிறோமோ என்பது கேள்வி. நீரின் அளவு குறைந்து பாலின் அளவு கூடுகையில் ஜீரணக்கோளாறு ஏற்பட்டு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

# என்னதான் 4.5% கொழுப்பு சத்து பாக்கெட் பாலில் இருந்தாலும் அவற்றை முழுவதும் கிரகித்துக் கொள்ள குழந்தைகளால் முடியாது. ஆனால் 4.5% அளவை விட கூடுதலாக கொழுப்பு சத்து உள்ள தாய்ப்பாலை குழந்தைகள் முழுவதும் கிரகித்து கொள்வதால் போதுமான கொழுப்பு சத்து குழந்தைக்கு கிடைக்கிறது.

# தாய்ப்பாலை காட்டிலும் இருமடங்கு புரதச்சத்து பாக்கெட் பாலில் இருந்தாலும் அவ்வளவு புரதம் குழந்தைகளுக்கு உடனே தேவைப்படுவதில்லை. பிறந்த சில மணித்துளிகளில் பசுமாட்டின் மடியை தேடும் கன்றுக்குத்தான் அவ்வளவு புரதச் சத்து தேவை.பிறந்து ஒன்றரை வருடங்கள் கழித்து நடக்கப்போகும் குழந்தைக்கு தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்தே போதுமானது.
# குழந்தைகளுக்கு ஆற்றலை அள்ளித் தரக்கூடிய கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தும், வைட்டமின் சத்தும், தாது உப்புக்களும் பாக்கெட் பாலை விட தாய்ப்பாலில் தான் அதிகம் உள்ளது.

aid1069191-728px-Stop-Breast-Feeding-Step-4Bulletமன்1

# எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரே விதமான பசுந்தீவனங்களை உட்கொள்கின்ற மாட்டின் பாலை காட்டிலும் தினசரி வெவ்வேறு விதமான, சத்தான உணவை உண்ணும் தாயின் பாலுக்கு ருசியும் நாளுக்கு நாள் மாறுபடும். இந்த சுவை மாறுபாட்டை குழந்தை பெரிதும் விரும்பும். இந்த பழக்கமே ஆறு மாதங்களுக்கு பிறகு, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவை குழந்தைகள் உட்கொள்ள காரணமாகிறது.

இப்படி தான் நம் குழந்தையின் வளர்ச்சிக்கும், வர்கீஸ் குரியனுக்கும் இடையில் ஒரு மாய தொடர்பு ஏற்பட்டது. யார் இந்த வர்கீஸ் குரியன்?

பேசுவோம் வாருங்கள்

௮

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>