நிறம், திடம்,சுவை- ஆர்.ஆர்.தயாநிதி/03

நிறம், திடம், சுவை.. (இதுவெண்மை புரட்சியின் சாயம் ) ஆர்.ஆர்.தயாநிதி

நிறம், திடம், சுவை.. (இதுவெண்மை புரட்சியின் சாயம் ) ஆர்.ஆர்.தயாநிதி

கரட்டடிக்கு மேச்சலுக்கு போன மாடுங்கெல்லாம் வந்துட்டது. அதுங்கள கட்டாந்தரையில கட்டி தண்ணி காட்டுப்பா” என்று கத்தும் திண்ணையில் வெட்டியாய் உட்கார்ந்திருக்கும் பெருசுகளில் ஒன்று.

01

வெயிலில் உழுதோ, பொழுதுக்கும் கரட்டடியில் மேய்ந்துவிட்டோ களைத்து போய் திரும்பும் மாட்டுக்கு தண்ணீர் காட்டும் இடம் தான் கட்டாந்தரை.வீடு வீடாக சென்று சேகரித்து வரும் கழநி தண்ணீர் தான் தாளியிலிருக்கும்.கழநி தண்ணீரென்பது காசு கொடுத்து வாங்கும் பொருளில்லை.

2016-21-10-17-38-20p

வடித்த கஞ்சியோ, எச்சில் தட்டில் கை கழுவி விட்ட தண்ணீரோ, பாத்திரம் கழுவின தண்ணீரோ- அதை ஒரு பானையில் சேர்த்து வைத்து, மாடு வைத்திருப்பவர் வீட்டு கட்டாந்தரையில் உள்ள தாளிக்கு கொண்டு போய் சேர்ப்பது அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்றாட பணி.

2016-21-10-18-20-07

அந்த தண்ணீரை நான்கு வாய் குடித்து விட்டு, குவித்து வைத்திருக்கும் வைக்கோலையோ, கடலை செடியையோ மென்று, அப்படியே வயக்காட்டில் சாவகாசமாய் உட்கார்ந்து அதை அசை போட்டு, செரித்து, அங்கங்கு போட்ட சாணியை எருவாக நினைத்து, அதோடு இலை, தழையெல்லாம் சேர்த்து உழுத நிலம் தான் நமக்கு வயிறார சோறு போட்டது முன்னொரு காலத்தில்.

2016-21-10-19-12-26 width=

கொஞ்ச நாளில் கட்டாந்தரையெல்லாம், துளசி செடி வைத்த முற்றமாகி போனது, மாடுகளெல்லாம் வயக்காட்டை விட்டு கான்கிரீட் பண்ணைக்குள் போனது, நேரடியாக மண்ணில் விழுந்த சாணி, எருக்குழியில் சேகரித்து வைக்கப்பட்டது,

2016-21-10-21-40-00

வடித்த கஞ்சியை பார்க்கும் வாய்ப்பே இல்லாமல் போனது, பாத்திரம் கழுவிய தண்ணீரெல்லாம் சாக்கடைக் குழிக்கு போனது.,
தாளிக்குள் எப்போதும் தவிடு, தீவனம், புண்ணாக்கு என்றானது, சாப்பாட்டுக்கு சாகுபடி பண்ண நிலத்தில் தீவனப்பயிர் அமோகமாய் விளைந்தது, ரசாயன உரங்கள் மண்ணோடு சேர்ந்து மண்ணும் பாழாய் போனது.

இதெல்லாம் ஒரே நாளில் நடந்து விடவில்லை. வெண்மை புரட்சியென்னும் பெயரால் படிப்படியாக நடத்தப்பட்டது.

2016-23-10-00-42-28

அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் தான் வர்கீஸ் குரியன் 1970 வாக்கில் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த காலகட்டத்தில், அமுல் என்னும் கூட்டுறவு பால் பண்ணையை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியவர் தான் இந்த வர்கீஸ் குரியன்..தேசிய பால் உற்பத்தி கழகத்தின் இயக்குனராக திகழ்ந்த இவரைத்தான் வெண்மை புரட்சியின் முன்னோடியாக கருதுகிறோம்.

2016-21-10-22-11-07

இந்த இலக்கினை அடைய குரியன் மேற்கொண்ட வழிமுறைகளில் முக்கியமானதாக சொல்லப்பட்டது கலப்பின மாடுகளின் உற்பத்தி மற்றும் கலப்பின தீவன வகைகளும் அதன் பயன்பாடுகளும்.Operation flood என்று பெயரிடப்பட்ட இந்த புராஜக்டை தன் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக கருதிய குரியன், பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறாத இந்தியாவை, உலகின் முன்னனி பால் உற்பத்தி செய்யும் நாடாக மாற்ற போவதாக அறிவித்தார்.

புராஜக்ட் ஆரம்பிக்கப்பட்ட 30 ஆண்டுகளில் அந்த இலக்கு எட்டப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பாலின் உற்பத்தியை பெருக்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என்று முதலில் சொல்லப்பட்டது.

அப்படியிருக்க பால் எப்படி நுகர்வு பண்டமானது..அதை ஒருங்கிணைக்கும் முறை எப்படி முதலாளிகள் வசம் போனது..

நவீன தொழில்நுட்பம் என்னும் பெயரில் பன்னாடுகள் எப்படி உள்ளே வந்தது.. மொத்தத்தில் பால் எப்படி பணம் ஆனது??

பேசுவோம் வாருங்கள் ஒரு கோப்பை தேநீரோடு..வெள்ளிக்கிழமைதோறும்…..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>