நியுசிலாந்துக்கு யானைக்குட்டி அன்பளிப்புத் தர இலங்கை அரசுக்கு தடை

நியுசிலாந்துக்கு யானைக்குட்டி அன்பளிப்புத் தர இலங்கை அரசுக்கு தடை

நியுசிலாந்துக்கு யானைக்குட்டி அன்பளிப்புத் தர இலங்கை அரசுக்கு தடை

நந்தி எனும் யானை குட்டியொன்றை நியூசிலாந்திற்கு அன்பளிப்பு செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தாற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தர்மவிஜய அமைப்பு தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் அழைக்கப்பட்டபோது கருத்துக்களை தெரிவித்த அந்த அமைப்பின் வழக்கறிஞர், அரசாங்கம் வன விலங்குகள் தொடர்பான சட்டங்களை மீறும் வகையில் இந்த அன்பளிப்பை மேற்கொள்ள தயாராகி வருவதாக குற்றம்சாட்டினார்.
எனவே நந்தி எனும் யானை குட்டியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அரச தரப்பின் வழக்கறிஞர் கருத்துக்களை தெரிவித்தபோது இதுகுறித்து அரசு தரப்பின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு கால அவகாசம் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதன்படி மனு மீதான விசாரணைகளை எதிர் வரும் செப்டம்பர் மாதம் 27 தேதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு உத்தரவிட்டது.
அதுவரை சம்பந்தப்பட்ட யானைக்குட்டியை அன்பளிப்பு செய்வது குறித்து எடுத்துள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கூடாதென்று நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>