நாளை நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஜாட் மக்கள் திட்டம்

3

டெல்லி: நாளை நாடாளுமன்றத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ள ஜாட் இன மக்களின் போராட்டத்தை முறியடிக்க டெல்லி மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உயர்கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வரும் ஜாட் இனத்தினர் நாளை நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அத்துடன் தேசிய சாலைகளில் மறியலில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் கலக்கமடைந்துள்ள டெல்லி அரசு, ஜாட் மக்களின் போராட்டத்தை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் மெட்ரோ ரயில் சேவையை நிறுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையை அமைதி காக்கும் படி ஜாட் மக்களை அரியானா மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து பேசிய அம்மாநில முதல்வர் M.L.கட்டார், ஜாட் மக்களின் கோரிக்கைகள் தொடர்பான குழப்பங்களுக்கு தகவல் தொடர்பு இடைவெளியே காரணம் என்றார். அரியானாவில் கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் டெல்லியில் நுழைவதை தடுக்க டெல்லியில் 3 விதமான மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேலைவாய்ப்பு மற்றும் தேர்வு உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளும் மாணவர்கள் முன்னதாகவே திட்டமிட்டு செயல்படுமாறு டெல்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜாட் இனமக்கள் நடத்திய போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையில், 30 பேர் கொல்லப்பட்டதும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>