நானும் ஓய்வு எடுக்க மாட்டேன் உங்களையும் விட மாட்டேன்: பிரதமர் மோடி

jakkamma news1

புதுடெல்லி : உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக பாஜவின் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க வரும் போது பாஜவினர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். பிரதமர் மோடி கூட்டத்தில் பேசுகையில், “நமது அடுத்த இலக்கு 2019 மக்களவை தேர்தல். இதற்காக நானும் ஓய்வு எடுக்க மாட்டேன் உங்களையும் விட மாட்டேன். கட்சியின் நிறுவன நாளான ஏப்ரல் 6ம் தேதிக்கும், பீம்ராவ் அம்பேத்கர் பிறந்தநாளான 14ம் தேதிக்கும் இடையிலான ஒரு வார காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மத்திய அரசின் சமூக நல பணிகள், சிறந்த நிர்வாகம் போன்றவற்றில் இளைஞர்களை தூதுவர்களாக நியமியுங்கள்’’ என்று தெரிவித்தார். பாஜ தலைவர் அமித்ஷா பேசுகையில், “நமக்கு முன் அடுத்து உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருங்கள்’’ என்று வலியுறுத்தினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>