நாட்டை காப்பாற்றுவது ஆர்.எஸ்.எஸ். தான்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி

நாட்டை காப்பாற்றுவது ஆர்.எஸ்.எஸ். தான்:  சுப்ரீம் கோர்ட் நீதிபதி

கோட்டயம்: இந்தியாவை காப்பாற்றுவது அரசியலமைப்பு சட்டம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ். அமைப்பும் தான் என முன்னால்சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேசினார்.

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பயிற்சி முகாம் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.டி.தாமஸ் பேசியது,
இந்தியாவில் மக்கள் மிகவும் பாதுகாப்பாக எப்படி வசிக்கின்றனர் என்று என்னை கேட்டால், அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், ராணுவம் ஆகிய மூன்றிற்கு பின்னர் நான்காவதாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தான். அரசியலமைப்பு மதச்சார்பற்ற தன்மையை வரையறுக்கவில்லை. நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை விடுவிக்க எந்த அமைப்பிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என என்னை கேட்டால் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என சொல்வேன். தவிர உடலை வலிமைப்படுத்துவற்கு கடின பயிற்சியை ஆர்.எஸ்.எஸ். கற்றுத்தருகிறது. இதன் மூலம் எந்த தாக்குதலுக்கு எதிராக தற்காத்து கொள்ள உதவுகிறது என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>