நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு

Daily_News_jakkamma

டெல்லி: நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியா முழுமைக்கும் 6,396 I.A.S பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 4,926 பணியிடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள 1,470 IAS பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறியுள்ளார். இதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 128 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 117 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும், மேற்கு வங்க மாநிலத்தில் 101 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எஸ் பணியிடம்:

இதேபோல நாடு முழுமைக்கும் 4,802 ஐ.பி.எஸ் பணியிடங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3,894 ஐ.பி.எஸ் பணியிடங்களில் மட்டுமே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 908 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் 114 ஐ.பி.எஸ் பணியிடங்களும், மேற்கு வங்கத் மாநிலதில் 99 ஐ.பி.எஸ் பணியிடங்களும் , ஒடிசா மாநிலத்தில் 79 ஐ.பி.எஸ் பணியிடங்களும் , கர்நாடக மாநிலத்தில் 72 ஐ.பி.எஸ் பணியிடங்களும், பீகார் மாநிலத்தில் 42 ஐ.பி.எஸ் பணியிடங்களும் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தவிர மொத்தமுள்ள 3,157 ஐ.எப்.எஸ் பணியிடங்களில் 2,597 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 560 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 46 பணியிடங்களும், மத்திய பிரதேசம், தமிழகம் மற்றும் ஒடிசாவில் தலா 45 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>