நாடு முழுவதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் : உளவுத்துறை எச்சரிக்கை

PicsArt_03-08-01.07.58

டெல்லி: நாடு முழுவதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்த பயணிகள் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து லக்னோவில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவன் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட தீவிரவாதி பதுங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது உத்திரப்பிரதேச வரைபடங்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியபிரதேசத்தில் சுமார் 13 ISIS தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே உத்திரப்பிரதேசத்தில் இன்று இறுதி மற்றும் 7 ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் தீவிரவாதிகள் பதுங்கல், துப்பாக்கிச் சண்டை, பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு, தேடுதல் வேட்டை, உளவுத்துறை எச்சரிக்கை போன்ற சம்பவங்கள் அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>