நாடு முழுவதிலும் உள்ள சுமார் 6,000 ஆளில்லா ரயில்வே கிராஸிங் பாதைகளை அகற்ற முடிவு

நாடு முழுவதிலும் உள்ள சுமார் 6,000 ஆளில்லா ரயில்வே கிராஸிங் பாதைகளை அகற்ற முடிவு

நாடு முழுவதிலும் உள்ள சுமார் 6,000 ஆளில்லா ரயில்வே கிராஸிங் பாதைகளை அகற்ற முடிவு

டெல்லி: நாடு முழுவதிலும் உள்ள சுமார் 6,000 ஆளில்லா ரயில்வே கிராஸிங் பாதைகளை அகற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளில்லா ரயில்வே கிராஸிங் இடங்களில் தண்டவாளத்தைக் கடக்கும்போது விபத்துகள் ஏற்படாத நிலையை உருவாக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆளில்லா ரயில் பாதைகளை கடக்க பொதுமக்களோ அல்லது வாகனங்களோ முயலும் போது பயங்கர விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக ஆளில்லா ரயில்வே பாதைகளை அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கையில், நாடு முழுவதும் சுமார் 28,607 –ரயில்வே கேட் பாதைகள் உள்ளதாகவும், இதில் 9,340 ஆளில்லா ரயில்வே கடக்கும் பாதைகளாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் 6,388 ரயில் பாதைகள் ஆளில்லா அகல ரயில் பாதைகள் என்றார். விபத்துகளை தவிர்க்கவும், குறைக்கவும் ஆளில்லா ரயில்வே கிராஸிங் பாதைகளை அகற்ற மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 6,352 ஆளில்லா அகல ரயில் கடவுப் பாதைகளை நீக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>