நாடு நாடாக பறந்து செல்லும் மோடி காவிரி பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை : இந்திய கம்யூ., குற்றச்சாட்டு

2016-16-9-11-31-34

தஞ்சை: கர்நாடகத்தில் தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டம் வெற்றியடைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், நாடு நாடாக விமானத்தில் பறந்து செல்லம் மோடி சொந்த நாட்டில் நடைபெற்று வரும் காவிரி பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என சாடினார்.

மேலும் பேசிய அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா இவ்விவகாரத்தில் கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தால் தீர்வு கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவியுள்ள தமிழக அரசுக்கும் மகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருவாரூரில் எர்ணாகுளம் – காரைக்கால் சென்ற ரயிலை மறித்து விடுதுலை சிறுத்தைகள் கட்சியினத் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அந்த கட்சியினர் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>