நாடாளுமன்றம் நவம்பர் 12-ல் கூடுகிறது

2016-01-10-16-07-58m

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற அலுவல் குறிப்புகளின்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 12ம் தேதி தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த கூட்டத் தொடரில், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு விகிதங்கள் தொடர்பாக இரண்டு மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய ஜிஎஸ்டி சட்டத்தில் வரிவிதிப்புகளை முடிவு செய்ய நவம்பர் 22ம் தேதி வரை ஜிஎஸ்டி கவுன்சில் கால அவகாசம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிகிறது. அதன் பின்னர், மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி தொடங்கலாம். மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு, பிப்ரவரி 12 முதல் மார்ச் 12 வரை ஒரு மாத இடைவெளி விடப்பட்டு, பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 12ம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால தொடர் தொடர்பாக மத்திய அரசின் இந்த அட்டவணையை, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பரிசீலித்து இதில் சிறிய மாற்றங்களை செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘‘மத்திய பட்ஜெட்டில் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள், ரயில்வே ஒதுக்கீடு விவாதங்கள் போன்றவை வழக்கமாக ஆறு வாரம் நடத்தப்படும். இந்த முறை அனைத்து விவாதங்களையும் நான்கு வாரங்களுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

கடந்த 21ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே போல், வழக்கமாக பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்வதை மாற்றி, முன் கூட்டியே பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் தேதியாக அறிவிக்கவும் முடிவு ெசய்யப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>