நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அருணாச்சல முதல்வர் நபம்துகி ராஜினாமா

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு  முன்பு அருணாச்சல முதல்வர் நபம்துகி  ராஜினாமா

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அருணாச்சல முதல்வர் நபம்துகி ராஜினாமா

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அருணாச்சல முதல்வர் நபம்துகி ராஜினாமா

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் நபம் துகி ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக பெமாகண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. கடந்த டிசம்பரில் முதல்வர் நபம் துகிக்கு எதிராக 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, மாநில அரசின் அனுமதியை பெறாமல், சட்டப்பேரவையை கூட்ட கவர்னர் ராஜ்கோவா உத்தரவிட்டார். இதற்கு முதல்வர் நபம் துகி தலைமையிலான மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அருணாச்சலில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நபம் துகி வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையே, அதிருப்தி கோஷ்டி தலைவரான கலிக்கோ புல் தனது ஆதரவாளர்களுடன் மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்தார். பின்னர், பாஜ ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட உத்தரவு செல்லாது எனவும், டிசம்பரில் இருந்தநிலையே தொடர வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட் கடந்த 13ம் தேதி பரபரப்பான தீர்ப்பளித்தது. இதனால், நபம் துகி மீண்டும் முதல்வராக அன்று மாலையே பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, நபம்துகி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை 16ம் தேதிக்குள்(இன்று) நிரூபிக்க வேண்டும் என்று தற்போது அருணாச்சல பிரதேச பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் திரிபுரா கவர்னர் ததாகதா ராய் உத்தரவிட்டார். இதையடுத்து, கவர்னர் ததாகதா ராயை நேற்று சந்தித்த நபம் துகி, பெரும்பான்மையை நிரூபிக்க 10 நாள் அவகாசம் கோரினார். ஆனால் நபம் துகியின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் கவர்னர்.

இதன்பின், நபம்துகியின் ஆதரவாளரான சபாநாயகர் நபம் ரெபியா கூறுகையில், ‘‘மழைக்காலம் என்பதுடன் குறுகிய காலத்தில் எம்எல்ஏக்களை வரச் சொல்வது சரியாக இருக்காது. மேலும், சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் அதிகாரிகள் வர மாட்டார்கள். எனவே, ஜூலை 24, 25 தேதிகளில் சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என கோரினோம். கவர்னர் அதற்கு இசையவில்லை’’ என்றார். சட்டசபையில் மொத்த பலம் 60. இதில் 2 இடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள 58 பேரில் 43 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக கலிக்கோ புல் கூறி வருகிறார். முதல்வர் நபம்துகிக்கு வெளிப்படையாக 14 எம்எல்ஏக்களின் ஆதரவே உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சட்டபேரவையில் நபம்துகி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவியை நபம் துகி ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய சட்டசபை காங்கிரஸ் தலைவராக பெமா கண்டு தேர்வு செய்யப்பட்டார். எனவே புதிய முதல்வராக பெமா கண்டு , ஆட்சி அமைக்க கவர்னரிடம் அனுமதி கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அதிருப்தி காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு அளிக்கும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக, அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>