நமது மக்கள் நல்ல நிபுணரை தான் தேடுகிறார்கள் – கமல்ஹாசன் :கதிர்

1500295596

நடிகர் கமல்ஹாசன் தனியார் டி.வி.,க்கு அளித்த பேட்டியில்,

நான் புதிதாக அரசியல் பேசவில்லை. எதையும் மனதில் வைத்துக் கொண்டு குறை கூறவில்லை. மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் எனக்கும் அக்கறை உண்டு. கருத்து சொல்ல உரிமை உண்டு. அது பற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை. ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன்.

நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தேடுகிறார்கள். பொதுப் பணி துறை என்றால் பொறுப்பான என்ஜினீயர் அதற்கு தலைமை ஏற்க வேண்டும். சுகாதார துறை என்றால் சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும்.எனது விமர்சனம் பொதுவானது. நான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் காரணம் என்ன வென்றால் எனக்கு நடிப்பு பற்றி தெரியும். இவ்வாறு கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>