நமது உரிமையை நலைநாட்ட தமிழக முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்.தமிழிசை செளந்தராஜன்

27-1453836696-tamilisai4-600

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சற்று ஆறுதல். 25 டிஎம்சி தண்ணீர் தேவை. ஆனால் அதையும் தர மறுத்து போராட்டத்திற்கு தூண்டி சர்வகட்சி கூட்டம் கூட்டியுள்ளது.

கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடமுடியாத என்றிருந்தால் தமிழக அரசு உடனடியாக ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். சர்வகட்சி கூட்டம் அல்லது அனைத்து விவசாயிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

தமிழகம்தான் அதிக பாசன வசதி பெறவேண்டிய மாநிலம். அப்படியிருக்க தண்ணீர் தர மறுக்க கர்நாடகாவிற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.

கர்நாடகம் உடனே உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்.

தமிழக அரசு இன்னும் அதிக அளவு தண்ணீர் வேண்டுமென கோர வேண்டும். இப்போதிருக்கும் சூழலில் கர்நாடகா தண்ணீர் கொடுத்தாலும் பயன்ற்றதாகவே இருக்கும்.

தமிழக மக்கள் தக்கப்படுவதும் தமிழக பேருந்துகள் தாக்கப்படுவதும்ஒரு மோசமான அணுகுமுறை. இதை கர்நாடக முதல்லமைச்சர் உடனே தடுக்க வேண்டும். இந்த பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுக்க எந்த முதலமைச்சரும் அனுமதிக்கக்கூடாது.

தமிழக முதல்வர் மற்ற முதல்வர்களுடன் பேசி தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகத்திற்கு தேவையான 419 டிஎம.சி தண்ணீரில் பாதியளவு கூட கர்நாடக அரசு கோடுத்ததே இல்லை. தமிழக அரசு நமது உரிமையை நலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமெனவும் அப்படி கூட்டினால் அதில் பாஜக கலந்துகொண்டு ஆதரவு அளிக்கும். தமிழகத்தின் உரிமையை தமிழக பாஜக எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காது.

தமிழக அரசு நதிநீர் கடலில் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>