நடிகை கடத்தல் வழக்கு: திலீபின் மனைவி பொய் சொல்கிறார் அவருக்கு எல்லாம் தெரியும் – பல்சர் சுனி

201708231102331770_Kerala-actress-abduction-Dileeps-wife-Kavya-Madhavan-is_SECVPF

பிரபல கேரள நடிகை ஒருவரை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பபட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழக்கை விசாரிக்க மாஜிஸ்திரேட்
நடிகர் திலீப்பின் காவலை வருகிற 2-ந்தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில் நடிகர் திலீப் தாக்கல் செய்து இருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. திலீப்புக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிற்பகலிலும் இந்த விசாரணை தொடர்ந்தது. அதன்பிறகு திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணையை மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்தார்.இதனால் இன்றும் திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை 2வது நாளாக நடைபெற உள்ளது.

இதற்கிடையில் நடிகை கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான பல்சர் சுனிலை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக குன்னம்குளம் கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினார்கள்.அதன்பிறகு பல்சர் சுனிலை மீண்டும் கோர்ட்டில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர் அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னை தெரியாது என்று காவ்யா மாதவன் கூறியது பொய். அவருக்கு என்னை நன்றாக தெரியும்.அவரிடம் இருந்து பல முறை நான் பணம் வாங்கி உள்ளேன்.ஆனால் காவ்யாமாதவனுக்கும் நடிகை கடத்தல் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>