நடிகர் விஷாலின் மனு மற்றும் தீபாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது .

2017-05-12-18-11-25

சென்னை: ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்த, நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத 2 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். முன்னதாக விஷாலின் மனுவில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக அதிமுக, திமுக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் வாதிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் மனு பரிசீலனையில் சொத்துகள், வழக்குகள் தொடர்பான 26-ம் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாததால் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>