நடிகர் சூர்யாவின் “சொடக்கு மேல சொடக்கு” பாடல் மீது புகார்

நடிகர் சூர்யாவின் "சொடக்கு மேல சொடக்கு" பாடல் மீது புகார்

நடிகர் சூர்யாவின் படத்தில் இடம்பெறுள்ள “சொடக்கு மேல சொடக்கு” பாடலில் வரும் வரிகளை நீக்க வலியுறுத்தி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து வெளிவர உள்ள “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தில் “சொடக்கு மேல சொடக்கு போடுது” என்கிற பாடல் பிரபலமடைந்து வருகிறது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இளைஞர்கள் மத்தியில் வன்முறையயை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக விருகம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சதீஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது” என்று அரசியல்வாதிகளை கெட்டவர்கள் போல் சித்தரிக்கும் வகையில், பாடல் வரிகள் உள்ளதாகவும், இளைஞர்களை வன்முறையில் ஈடுபட தூண்டுவதாக உள்ளதால், அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார். எனவே, படத்தை தயாரித்த நிறுவனம் மீதும், பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>