நடிகர்களின் சம்பளத்தை பட அதிபர்கள் தான் முடிவு செய்கிறார்கள் நடிகர் விஷால் :கதிர்

201707280044047372_Interview-with-actor-Vishal_SECVPF

நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. ரூ.25 கோடிக்கு வியாபாரம் ஆகும் ஒரு படத்தில், கதாநாயகன் ரூ.40 கோடி சம்பளம் கேட்பதாக ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி குற்றம் சாட்டினார். நடிகர்கள் சம்பளத்தை குறைத்தால், தயாரிப்பு செலவை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்தநிலையில், சென்னையில் நேற்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான விஷால், ஏழை மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்கி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாக விமர்சிக்கப்படுகிறது. எந்த நடிகரும் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்பது இல்லை. தயாரிப்பாளர்கள்தான் நடிகர்களின் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்றமாதிரி சம்பளத்தை முடிவு செய்து கொடுக்கிறார்கள்.

‘பெப்சி தொழிலாளர்கள் சிலர் படப்பிடிப்பை நிறுத்தியதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. படப்பிடிப்புகளை நிறுத்த தயாரிப்பாளருக்கு மட்டும்தான் உரிமை உண்டு. வேறு யாரும் படப்பிடிப்பை நிறுத்த முடியாது.

தற்போது தயாரிப்பாளர்கள் விரும்பினால் ‘பெப்சி’யில் இல்லாதவர்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான், சினிமாத்துறை தளைத்து இருக்க முடியும்.

யார் வயிற்றிலும் அடிப்பது தயாரிப்பாளர்கள் நோக்கம் அல்ல. ஆனாலும் தயாரிப்பாளர்கள் நலன் பாதுகாக்கப்படவேண்டும். ‘பெப்சி’யுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்.

இவ்வாறு விஷால் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>