தோனி தலைமை டி20 அணி அறிவிப்பு: ரெய்னா, யுவராஜ் இல்லை

உலகக்கோப்பை டி20 அணியில் ஆடிய ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஆடவிருப்பதால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

உலகக்கோப்பை டி20 அணியில் ஆடிய ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஆடவிருப்பதால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

அமெரிக்காவின், புளோரிடாவில் நடைபெறும் இந்திய, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலிருந்து சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

உலகக்கோப்பை டி20 அணியில் ஆடிய ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஆடவிருப்பதால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வீரர்களுடன் தோனி, பும்ரா மட்டுமே புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். யுவராஜ், ரெய்னாவுடன் ஹர்திக் பாண்டியா, பவன் நேகி, ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, மணிஷ் பாண்டே ஆகியோரும் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியா செல்லும் இந்தியா ஏ அணியில் மணீஷ் பாண்டே தேர்வு செய்யப்பட்டதனால் இதில் இல்லை. அதே போல் ரெய்னா, யுவராஜ், ஹர்பஜன் ஆகியோர் துலீப் கோப்பை போட்டிகளில் பிங்க் நிறப் பந்து சோதனை கிரிக்கெட்டில் ஆடவுள்ளனர்.

ரெய்னா இந்தியா கிரீன் அணிக்கும் யுவராஜ் இந்தியா ரெட் அணிக்கும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டதால் அணியில் இல்லை. நெஹ்ரா முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வருகிறார், நீக்கம் என்றால் ஹர்திக் பாண்டியா, பவன் நேகியைக் குறிப்பிடலாம்.

இந்திய அணி விவரம் வருமாறு:

தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, மொகமது ஷமி, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, ஸ்டூவர்ட் பின்னி.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>