தொடரும் விவசாயிகள் உயிரிழப்பு

நீரின்றி பயிர் அழிவதை கண்டு ஜீரணிக்க முடியாமல் விவசாயிகள், தினம் தினம் வேதனையில் செத்து மடிகின்றனர். தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக தொடரும் சோகத்திற்கு கடந்த 3 மாதங்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் இன்று வரை 32 பேர் பலியாகி உள்ளனர். திருவாரூரில் 14 பேர், திருச்சியில் 4 பேர் என டெல்டா மாவட்டங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு மிகவும் காலதாமதமாக கடந்த செப்டம்பர் 20ம் தேதி மேட்டூர்அணை திறக்கப்பட்டது. ஆனால் அந்த நீர் கடைமடைப் பகுதி வரை வந்து சேரவில்லை. என்றாலும் எப்படியும் ஆற்றில் தண்ணீர் வரும் அல்லது வடகிழக்கு பருவ மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். சிலர் நாற்று விட்டும் நடவு செய்தனர்.

இந்நிலையில், காவிரி நீரும் நின்றுபோனது, எதிர்பாக்கப்பட்ட பருவ மழையும் பொய்த்துப்போனது. சொந்த நிலத்தில் சாகுபடி செய்தவர்கள் போதுமான நீரின்றி மனம் நொந்தனர். குத்கை நிலத்தில் பயிரிட்டவர்கள் எப்படி குத்தகை பணம் கொடுப்பது என்று மனம் வெந்தனர். பச்சை பசேல் என காட்சி தரவேண்டிய விலை நிலங்கள், கடும் வறட்சியில் கருகி காய்ந்து போகவே அதில் ஆடு, மாடுகளை மேயவிட்டனர். ‘ஏற்கனவே குறுவை சாகுபடியும் கைவிட்டு போச்சி, கடன் வாங்கி செய்த சம்பா சாகுபடியும் கருகிப் போச்சி’ இந்த வேதனையும் அதிர்ச்சியும் விவசாயிகளை வாட்டி வதைக்கவே மாரடைப்பாலும், விஷமருந்தியும் உயிரை மாய்த்து வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>