தொகுதி பிரச்னையை கவனிக்காத சபாநாயகர் தனபாலை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

dhanapalspeakerlong

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் நடந்த விழாவுக்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். விழாவில், அவிநாசி எம்எல்ஏவும், சபாநாயகருமான தனபால் பங்கேற்று 564 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 59 ஆயிரத்து 130 மதிப்பிலான நல உதவித்திட்டங்களை வழங்கினார். விழா நடந்து கொண்டிருந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் மூர்த்தி தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் சபாநாயகருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே உள்ளே நுழைய முயன்றனர்.

மேலும், அவிநாசி வட்டாரத்தில் கிராமப்புறங்களில் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க முற்படுவதை கண்டித்தும், தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க கவனம் செலுத்தாததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விழா மேடைக்கு செல்லமுயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தால் விழா நடந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>