தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

1496395898-3028_02062017_KLL_CMY

சென்னை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுத்து, இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த முடியாவிட்டால், அங்கு தேர்தலை மீண்டும் ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகரில் வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதியில் இந்த முறையும் தொடர்ந்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் நேரடியாக இதில் ஈடுபடாமல், தஞ்சை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தங்களது கட்சியினரை வரவழைத்து, அவர்கள் மூலம் பணப்பட்டுவாடாவை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தேர்தலை நேர்மையாக எதிர்கொள்ளும் கட்சிகள் பிரசாரம் செய்தும், அதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பணப்பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து, தேர்தலை நேர்மையாக நடத்த முடியவில்லையெனில், ஆர்.கே.நகரில் தேர்தலை மீண்டும் ரத்து செய்ய வேண்டும் என்றார் அவர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>