தேசிய கல்விக் கொள்கை: ஆக.8-இல் ஆர்ப்பாட்டம்:திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

1976336557veeramani

தேசியக் கல்விக் கொள்கையின் முன்மொழிவுகளை முழுவதுமாக நிராகரிக்க வலியுறுத்தி, அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி, சென்னையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

சென்னையில் “தேசியக் கல்விக் கொள்கை 2016′ சில உள்ளீடுகள் உருவாக்கம் தொடர்பாக அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்குப் பின்னர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தேசியக் கல்விக் கொள்கை வரைவுக்கான உள்ளீடுகள்’ என்ற ஆவணத்தில் கூறப்பட்டுள்ள முன்மொழிவுகளை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கவும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>