தெற்கு ஏமனில் குண்டு தாக்குதல்: 40 பேர் பலி

150117105257_yemen_blast_police_academy_640x360_epa

தெற்கு ஏமனிதெற்கு ஏமனில் ஏடென் நகரில் உள்ள ராணுவக் கட்டடம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
அரசு ஆதரவு கிளர்ச்சிப் படையான பாப்புலர் ரெசிஸ்டன்ஸ் அமைப்பின் தலைமையகத்துக்குள் தற்கொலை குண்டுதாரி ஒருவர் காரை ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கிளர்ச்சிக் குழுதான், கடந்த ஆண்டு ஹெளதி கிளர்ச்சியாளர்களை ஏடெனை விட்டு விரட்டுவதற்கு உதவியாக இருந்தது.

150620123731_yemen_sanaa_blast_640x360_epa

ஷியா – ஹெளதி கிளர்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு ஜனவரியில் தலைநகர் சனாவைக் கைப்பற்றிய பிறகு, ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது.
சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, அப்-ரபு மன்சூர் ஹாதி அரசுக்கு ஆதரவாக, செளதி தலைமையிலான கூட்டுப் படையினர் ஏமனில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஐ.நா. ஆதரவிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்விடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>