தெரிந்ததை சொல்கிறேன்: தகுதிக்கு மீறிய கடன்- திலிப்குமார்.மு

2016-24-11-01-41-55m

நம் முன்னோர்கள், தகுதிக்கு மீறி கடன் வாங்கக் கூடாது என்று சொன்னது இன்றைய நவீன உலகுக்கும் 100% பொருந்தும். உங்களால் சுலபமாக கட்டும் அளவுக்குதான் கடனை வாங்க வேண்டும்.

அதுவும் எந்தக் கடனை எந்த அளவுக்கு வாங்க வேண்டும் என்கிற வரையறை இருக்கிறது. வீட்டுக் கடன் என்கிறபோது அதிகபட்சம் நிகர மாத வருமானத்தில் 40% தொகை செலுத்தும் வரைக்கும் வாங்கலாம். (மற்ற கடன்களுக்கான ஃபார்முலா அட்டவணையில்). இங்கே நிகர மாத வருமானம் என்பது பிராவிடென்ட் ஃபண்ட் ( பிஎஃப்), தொழில் வரி, வருமான வரி உள்ளிட்ட இதர பிடித்தங்கள் போக கையில் கிடைக்கும் தொகை ஆகும்.

ஒருவரின் மாத மொத்தச் சம்பளம் ரூ. 50,000. அவருக்கு பிஎஃப், வரிகள், ஏற்கெனவே உள்ள சிறு கடன்களுக்கான மாதத் தவணை எல்லாம் போக கிடைக்கும் ரூ.40,000, நிகர வருமானம் எனப்படும். இதில் 40 சதவிகிதம் அதாவது ரூ.16,000 மாதத் தவணை கட்டும்விதமாகதான் வீட்டுக் கடன் வாங்க வேண்டும்.
அப்போதுதான் சில மாதங்களில் ஏதாவது புதுச் செலவுகள் (கல்யாண வீடு, திடீர் சொந்த ஊர் பயணம், உடல் நலக் குறைவு) ஏற்பட்டால் சமாளிக்க முடியும்.

2016-24-11-02-06-01

மேலே அட்டவணையில் கொடுக்கப் பட்டிருப்பது ஓர் உதாரணம்தான். இதில் 5% முதல் 10% வரை முன்பின் இருக்கலாம். உதாரணத்துக்கு வீட்டுக் கடன், தனிநபர் கடன் இல்லை என்கிறபோது வாகனக் கடன் 25% வரைக்கும் செல்லாம்.
ஒரு பெரிய கடன் இருக்கும் போது மற்றொரு பெரிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில், கார் வாங்க ஒரே நேரத்தில் கார் கடன் மற்றும் தனிநபர் கடன் ஒரு சேர வாங்கக் கூடாது.
தனிநபர் கடனுக்கு பதில் கார் கடனை சேர்த்து வாங்கிக்கொள்ள முடிந்தால் நல்லது. வட்டி குறைவாக இருக்கும்.
ஒரே நேரத்தில், ஒருவரின் அனைத்து கடன்களுக்குமான மாதத் தவணை, மாத வருமானத்தில் 50 சதவிகிதத்துக்கு மேலே செல்லாமல் இருப்பது நல்லது.

வீட்டுக் கடன் எவ்வளவு வாங்க வேண்டும்?

21-1437453981-28-1403939198-9-hardworking-ant

வீட்டுக் கடன் என்பது குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி ஈட்டும் ஆண்டு மொத்த வருமானத்தில் சுமார் 5 மடங்குக்கு அதிகம் போகாமல் இருப்பது நல்லது.
உதாரணமாக, 30 வயது நிரம்பிய கணவனின் ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சம். மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம். மொத்தம் ரூ.6 லட்சம். இவர்கள் ரூ.25-30 லட்சத்துக்கு மிகாமல் வீட்டுக் கடன் வாங்கலாம்.

40-45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் அதிகபட்சம் 10-15 ஆண்டுகளுக்குள் கடனை நிறைவு செய்வதுபோல் வீட்டுக் கடனை பெறுவதே சரியானது.
எளிதாக கடன் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டு, சம்பளத்தில் 60-70 சதவிகிதத்தை மாதத் தவணையாக கட்டுகிறார்கள் சிலர். இது பெரிய தவறு. ஒருவர், அவரின் மாத சம்பளத்தில் 35-40 சதவிகிதத்துக்கு மிகாமல் கடன் இஎம்ஐ இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதற்குமேல் மாதத் தவணை செலுத்துபவர்கள், எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டுக்கு வழியில்லாமல் இருப்பார்கள்.
இவர்கள் சின்ன பிரச்னை வந்தால்கூட, நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியாமல் கஷ்டப்படுவார்கள். இப்படி தவணைத் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் இடையில் கொஞ்சம் கடன் தொகையை கட்டி, மாதத் தவணையை குறைத்துக் கொள்வது நல்லது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>