தென்பெண்ணை ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்: குடிநீர் ஆதாரம் அடியோடு பாதிப்பு

தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 391 கிமீ தூரம் பாய்ந்து இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 கி.மீ2 ஆகும். மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.

இங்கு தேக்க மடையும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதாலும், அதில் பன்றிகள் சங்கமிப்பதாலும் தொற்றுநோய் பரவ நேரிடுகிறது. அதோடு புனித நதியான தென்பெண்ணை ஆறு மாசடைவதுடன் கடந்த சில வருடங்களாக குடிநீரின் சுவை அடியோடு மாறியுள்ளது.

இங்கு தேக்க
மடையும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதாலும், அதில் பன்றிகள் சங்கமிப்பதாலும் தொற்றுநோய் பரவ நேரிடுகிறது. அதோடு புனித நதியான தென்பெண்ணை ஆறு மாசடைவதுடன் கடந்த சில வருடங்களாக குடிநீரின் சுவை அடியோடு மாறியுள்ளது.

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் நகரின் பொக்கிஷமாக விளங்கி வருவது தென்பெண்ணை ஆறு. வெண்ணெய் உருகும் முன்பு பெண்ணை பெருகும் என்பது சங்ககால பழமொழி. அந்த அளவிற்கு தென்பெண்ணை ஆறு முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்து வந்தது. கடும் வறட்சியில் கூட குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. எந்த அளவிற்கு இந்த ஆறு கடந்த காலகட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியதோ தற்போது, அந்த அளவிக்கு பாழ்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்த ஆறு குப்பை மேடாக மாறி வருகிறது. குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் தான் ஆறுகள், குளங்கள், ஏரிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்கள் அறிந்தும் குப்பைகளை கொட்டுவது, ஆலை நிர்வாகத்தினர் கழிவுநீரை கழிப்பது போன்ற செய்கையால், நீரின் தன்மை மாறுவதோடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. சமூக விரோதிகள் தங்கள் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை கொட்டும் குப்பை கிடங்காக தான் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு அதனை தீயிட்டு கொளுத்தி சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளில் விஷக்காய்ச்சலை ஏற்படுத்தும் பன்றிகள் முகாமிட்டு வருகிறது. இங்கு தேக்க
மடையும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதாலும், அதில் பன்றிகள் சங்கமிப்பதாலும் தொற்றுநோய் பரவ நேரிடுகிறது. அதோடு புனித நதியான தென்பெண்ணை ஆறு மாசடைவதுடன் கடந்த சில வருடங்களாக குடிநீரின் சுவை அடியோடு மாறியுள்ளது.

திருக்கோவிலூர் பேரூராட்சி சார்பில் குப்பைகள் கொட்டுவற்கு கனகநந்தல் சாலையில் ஒதுக்குப்புறமாக தனியார் இடம் வாங்கப்பட்டு அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு, திரவக்கழிவு என தனித்தனியாக பிரித்து அதில் மட்க்கும் குப்பைகளை உரமாக தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றை மாசு
படுத்தும் வகையில் குப்பை கொட்டும் தளமாக தான் பயன்படுத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகமும் ஆற்றில் குப்பைகளை கொட்டுவதையும், அதனை தீயிட்டு எரிப்பதையும் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதே நிலை தொடர்ந்தால் திருக்கோவிலூர் பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது திருக்கோவிலூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு செஞ்சி, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் சின்ன சேலம், வேட்டவலம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மாசடைய வாய்ப்புள்ளது. அதன் மூலம் மர்மகாய்ச்சல் பரவவும் வாய்ப்புள்ளது. அதோடு ஆற்றின் புனிதமும் கெட வாய்ப்புள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் குப்பைகள் கொட்டுவதையும், அங்கு ஏற்கனவே தேங்கியுள்ள குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை தடுக்கவும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>