தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி டிக்கெட்டுகள்: கிரண்பேடி

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி டிக்கெட்டுகள்: கிரண்பேடி

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி டிக்கெட்டுகளை: புதுவை துணைநிலை ஆளுநர்கிரண்பேடி புதுவையில் 107, காரைக்காலில் 40 பேர் தங்கள் வீடுகளில் கழிப்பறைகளைகட்டிய அவர்க்கு பரிசாகவும், கழிப்பறை கட்டாதவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் குடும்பத்துக்கு தலா 3 டிக்கெட்டுகள் வீதம் மொத்தம் 450 இலவச டிக்கெட்டுகளைவழங்கினர்

புதுச்சேரி: தூய்மை இந்தியா திட்டத்தில் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி திரைப்பட டிக்கெட்டுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வழங்கினார்.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களையும், நகர பகுதிகளையும் தூய்மையானதாக மற்றும் 100 சதவீதம் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 45,000 வீடுகள் மற்றும் நகரப் பகுதிகளில் 9,000 வீடுகளிலும் கழிவறை வசதிகள் இல்லை என்று கணக்கெடுப்பில் தெரியவந்தது.

பொது மக்களின் பங்கேற்பு கழிவறை கட்டும் திட்டத்தில் அவசியம். அவர்களை ஈர்க்க புதிய வழியாக கழிப்பறை கட்டுவோருக்கு ரஜினி நடித்த கபாலி திரைப்பட டிக்கெட்டுகள் இலவசமாக தரப்படும் என அறிவித்தார்.

இதன்படி புதுவை மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் கழிப்பறை இல்லாத வீடுகளில் விரைவில் கழிப்பறை கட்டி முடிப்பவர்களுக்கு கபாலி திரைப்பட டிக்கெட் வழங்கப்படும் அறிவித்தது.

இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி டிக்கெட்டுகளை: புதுவை துணைநிலை ஆளுநர்கிரண்பேடி புதுவையில் 107, காரைக்காலில் 40 பேர் தங்கள் வீடுகளில் கழிப்பறைகளைகட்டிய அவர்க்கு பரிசாகவும், கழிப்பறை கட்டாதவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் குடும்பத்துக்கு தலா 3 டிக்கெட்டுகள் வீதம் மொத்தம் 450 இலவச டிக்கெட்டுகளைவழங்கினர்

அவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி புதுவை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

இதன் அடையாளமாக 5 பயனாளிகளக்கு கபாலி டிக்கெட்டுகளை ஆளுநர் கிரண்பேடி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் சத்யேந்திர சிங் துர்சாவத், ஆளுநர் மாளிகை தனி அலுவலர் அம்ருதா, துணைச் செயலர் ஸ்ரீதரன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செலினா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் கிரண்பேடி கூறியதாவது:

புதுச்சேரியில் வரும் அக்டோபர் 2-ம் தேதி கழிப்பறைகளே இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலையை உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கழிப்பறைகளை கட்டியவர்களுக்கு பரிசாக கபாலி படத்தின் இலவச டிக்கெட்டுகள் தரப்பட்டுள்ளன. விரைவில் கழிப்பறை கட்டாதவர்களும் தங்கள் வீடுகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் நிதியுதவி பெற்று கழிப்பறை கட்டலாம். புதுவையின் முன்னேற்றத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

டிக்கெட்டுகளை பெற்ற அரியூர் பார்வதி, பங்கூர் பாண்டுரங்கன் ஆகியோர் கூறியதாவது:

நீண்ட நாள்களாக எங்கள் வீடுகளில் கழிப்பறை இல்லை. அதிகாரிகள் நேரில் வந்து கழிப்பறை இருப்பதின் அவசியத்தை விளக்கினர். இதனால் தூய்மை இந்தியா திட்டத்தில் நிதியுதவி பெற்று கட்டினோம். தற்போது ஆளுரிடம் கபால் பட டிக்கெட்டுகளை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>