துருக்கியில் அனைத்து இந்திய விளையாட்டு வீரர்களும் பத்திரமாக உள்ளனர் மந்திரி விஜய் கோயல்

துருக்கியில் அனைத்து இந்திய விளையாட்டு வீரர்களும் பத்திரமாக உள்ளனர் மந்திரி விஜய் கோயல்

துருக்கியில் நடைபெறவிருந்த பள்ளி ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக இந்திய விளையாட்டு வீரர்கள் சென்று உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளும் சென்று உள்ளனர். இந்நிலையில் துருக்கியில் ஒருபிரிவு ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதால் அசாதாரண சூழ்நிலை எழுந்தது. “மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியாவிற்கான துருக்கி தூதர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு உள்ளேன், அவர்கள் 147 விளையாட்டு வீரர்களும் பத்திரமாக உள்ளனர் என்பதை உறுதி செய்து உள்ளனர்,”

துருக்கியில் அனைத்து இந்திய விளையாட்டு வீரர்களும் பத்திரமாக உள்ளனர் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி விஜய் கோயல் கூறிஉள்ளார்.

துருக்கியில் நடைபெறவிருந்த பள்ளி ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக இந்திய விளையாட்டு வீரர்கள் சென்று உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளும் சென்று உள்ளனர். இந்நிலையில் துருக்கியில் ஒருபிரிவு ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதால் அசாதாரண சூழ்நிலை எழுந்தது. இதன் காரணமாக குழந்தைகளை அனுப்பிய பெற்றோர்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். விளையாட்டு வீரர்களை பத்திரமாக மீட்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே ஆங்கில பத்திரிக்கைக்கு அங்கிருந்து பேட்டி அளித்து உள்ள சென்னையை சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி, ”டிராப்சோனில் நகரில் நிறுவப்பட்டுள்ள விளையாட்டு கிராமத்தில் நாங்கள் தங்கியுள்ளோம். காலையில் என் பெற்றோர் தொலைபேசி வாயிலாக சம்பவம் தொடர்பாக எனக்கு தகவல் தெரிவித்தார்கள். ஆனால் வெளியே சென்று பார்த்தபோது அனைத்து இயல்பாகவே இருப்பதுபோல் இருந்தது. சாலைகள் சற்று வெறிச்சோடியிருந்தது. சிறிது நேரம் கழித்து வழக்கம்போல் எல்லோரும் பரபரப்பாக தங்கள் அலுவல்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே தோன்றுகிறது.

துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி காரணமாக தங்கியிருக்கும் இடத்தைவிட்டு யாரும் வெளியேற வேண்டாம் என நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளி ஒலிம்பிக்ஸ் தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றது, அதற்குள் நிலைமை சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அவ்வாறு நிலைமை சரியானால் நாங்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற காத்திருக்கிறோம்” என்று கூறிஉள்ளார.

இந்நிலையில் துருக்கியில் அனைத்து இந்திய வீரர்களும் பத்திரமாக உள்ளனர் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி விஜய் கோயல் கூறிஉள்ளார்.
“மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியாவிற்கான துருக்கி தூதர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு உள்ளேன், அவர்கள் 147 விளையாட்டு வீரர்களும் பத்திரமாக உள்ளனர் என்பதை உறுதி செய்து உள்ளனர்,”
விளையாட்டு இந்திய கூட்டமைப்பு உதவியுடன் இந்திய விளையாட்டு ஆணையம் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

மத்திய அரசு, குறிப்பாக வெளியுறவுத்துறை விளையாட்டில் கலந்து கொள்ள சென்றவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. விளையாட்டில் கலந்து கொள்ள சென்றவர்களின் உறவினர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், பாதுகாப்பு குறித்து உறுதி அளித்து உள்ளதாகவும் விஜய் கோயல் கூறிஉள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>