திவ்யபாரதி மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத்தடை :மு.திலிப்

IMG-20170725-WA0005_12315

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி பல சமூகப் போராட்டங்களை எடுத்து நடத்தியுள்ளார். குறிப்பாக மனிதன் மலம் அள்ளும் அவலத்திற்கு குரல் கொடுத்து சமூக ஆர்வலர்களின் ஆதரைப் பெற்றுவந்தார். திவ்யபாரதிக்கு போனில் பல மிரட்டல்களும்,எதிர்ப்புகளும் வந்தன. அதைத் தொடர்ந்து போராளி இரோம் சர்மிளா உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு கரம் நீட்டினர் .

இந்நிலையில் திவ்யபாராதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நான் கக்கூஸ் ஆவணப்படத்தில் இயக்குநராகப் பணியாற்றி உள்ளேன். அந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்ட சில சமூகங்களைத் தாக்கும் வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு காவல்துறையால் வேண்டுமென்றே என் மீது போடப்பட்ட வழக்கு. ஆகவே வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் – சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு திவ்யபாரதி மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தும் ஒத்தக்கடை போலீஸார் இது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்கவும் கூறி மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தனர் .

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>