தில்லுக்கு துட்டு;நிரல்வீ

தில்லுக்கு துட்டு நிர்ல்வீ


 

                தில்லுக்கு துட்டு                                              

                                                                                                            நிரல்வீபடத்தின் நாயகன் ‘சந்தானம்’ இயக்குனர் ‘ராம் பாலா’. இந்தக் கூட்டணி ஏற்கனவே தமிழ் ரசிகர்களின் வயிற்றை எல்லாம்  கண்ணீர் பொங்க பொங்க புண்ணாக்கிய லொள்ளு சபாவை நம்மால் மறக்க முடியாது. இந்த வெற்றிக் கூட்டணி, இப்போதும் வெள்ளித் திரையிலும் சேர்ந்திருக்கிறார்கள்.

 

மூன்று படங்கள் செய்து விட்டபின்னும்  ஒரு  நகைச்சுவை  நடிகராக  மட்டுமே  இருந்த சந்தானத்தை , ஒரு  வெகு  ஜனக் கதாநாயகனாக  ஆக்கியதில்  முழு  வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

 

“தில்லுக்கு துட்டு” ஒரு நகைச்சுவைப் படமாக மட்டும் நம்மால் கடந்து போய்விட முடியவில்லை என்பதே உண்மை.

காதலுக்கு  எதிர்ப்பு  தெரிவித்து  கூலிப்படை வைத்து காதலனை  கொலை  செய்வது  தற்கால நிகழ்வாக  இருக்கிறது.

647_0625160718598 Image00009j

 

அந்த ஓற்றை வரியை வைத்துக்கொண்டு கொலை செய்ய திட்டமிடும் கூலிப்படையின்  திட்டத்தில்  இருந்து  கதாநாயகன்  எப்படி வெற்றி பெறுகிறார்  என்பது தான் கதை…

 

இதில்  பேய்களை  சேர்த்து- நிஜமான  பேய்கள் மத்தியில் பேயாக நடிப்பவர்களுக்கும், ஏற்படும்  குழப்பத்தை வைத்து கதையை காமெடியாகவும், சுவாரஸ்யமாகவும் தந்திருக்கிறார்கள்…

 

ஆண்டாண்டு காலமாக பேய்ப் படங்களுக்கென உருவாக்கப்பட்டிருந்த இலக்கணங்களையும்,  சமீப காலமாக பேய்ப் படங்களுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இலக்கணங்களையும்  எளிதாக நொறுக்கிச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

பனிரெண்டு மணிக்குப் பேய் வரும் என்பதைச் சொல்ல பதினொண்ணே முக்காலுக்கு ஒருவன்  வருவான் என்பது எல்லாக் காலத்திலும் தமிழ் சினிமாவின் ஒரு காட்சியாகஇருந்துவந்துள்ளது  என்பது உண்மையே. ஒரு பேயைக் காட்டுவதற்கான கணினி வித்தைகளில் எந்த அலட்சியமும் காட்டாமல்  நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள்.

 

பேயைக் காட்டி பார்வையாளைகளை பயமுறுத்தாமல், பேயிக்குப் பயப்படும்  கதாப்பாத்திரங்களைக்  காட்டிப் பார்வையாளை களைச்  சிரிக்கவைக்கும்  வித்தையில்  வெற்றி  பெற்றிருக்கிறது.

எனினும் ,முதற்பாதியில்  கதாநாயகன்    அறிமுகமும், காதலுமாக கொஞ்சம் மெதுவாக நகர்கிறது  கதை… இரண்டாம் பாதியில் கதாநாயகியின் தந்தை சதி திட்டம் தீட்டிய பிறகு கதை  விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக திகிலும், நகைச்சுவையுமாக… படம் முடியும் வரை செல்கிறது.

சந்தானம்  கமர்ஷியல் ஹீரோவாக வெற்றி பெற்றிருக்கிறார்.

 

கூலிப்படை தலைவனாக வரும் மொட்டை ராஜேந்திரன் தன் உதவியாளர்களை  பேய்யாக நடிக்க  வைக்கும்  இவர் நிஜப்பேயிடம்  மாட்டிக்கொண்டு  படும்  பாடுகளில்  மொட்டை ராஜேந்திரனின்  நடிப்பு… படத்துக்குபெரியபலம்…

 

 

 


NTLRG_1605181738110000000


சுபாஷ் சந்திரபோஸ் கூப்பிட்டதும் வேல் கம்போடு சென்றவர்கள்  நாமதான் என்று கருணாஸ் கூற, அவரை  சந்தானம்  தனியாகவே  சென்று  பேய் பிடிக்க அனுப்பும்  இடத்திலும், “This locals are dangerous” எனக்கூறும்  செட்டின் வசனத்திலும் சமூகச் சிந்தனை  தெறிக்கிறது.

 

“கொஞ்சம் காமெடிபன்னினால் வில்லன் என்பதையே மறந்துடுவிங்களோ” என்ற ஒற்றை வசனத்தில் மாநகரக் காவல் கைதட்டல்களை மீண்டும் அள்ளுகிறார் “ஆனந்த ராஜ்”.

பார்வையாளனுக்கு நன்கு பரிட்சயமான  நபரை கதாபாத்திரமாகத் தேர்ந்தெடுக்கும்போது அவர் பார்வையாளர் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தை கருத்தில் கொள்ளவேண்டும் என்கிற குருநாதர் “கே.பாக்கியராஜின்” பாலப்பாடத்தை இயக்குனர் “ராம்பாலா” மறக்கவில்லை .

முக்கியமாக கதாநாயகியான ஒரு சேட்டு பெண்ணை, திரையிலும் சேட்டு பெண்ணாகவே காட்டிய தைரியத்துக்கும், சந்தானத்தின் கதாபாத்திரத்தை ஒரு செம மாஸ் பாடலுடன் தொடங்கிய தில்லுக்கு நிச்சயம்  துட்டு கொடுக்கலாம்.

 

676

 

தீபக்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு முக்கியத்துவமானதாக இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் பேய்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள்… குறிப்பாக பேய்களை துரத்தும் காட்சி ஒளிப்பதிவின் உச்சம்.

 

கலை இயக்குனர் மோகன் ஆர். பேய்கள் உலவும் இடமானாலும், கதாநாயகன் இருக்கும் இடமானாலும்  அவருடைய மெனக்கிடல் வெளிப்படுகிறது. தன்னோட வேலைகளை நிறைவாக செய்திருக்கிறார்.

 

படத்துக்கு மிகப் பெரிய பலம் கார்த்திக் ராஜாவின் பின்னனி இசை.

 

பாடல்கள் சொல்லும் அளவில் இல்லை. தமன் தன்னோட பங்கை ஒப்பேற்றி இருக்கார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>