திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சென்னையில் காலமானார்

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த 1975-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அவர், சிறந்த பாடலாசிரியர் ஆனார்.

சென்னை: பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார்(41) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். மஞ்சள் காமாலை நோயால் அவர் பாதிகப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் மருத்துவமனையில் இன்று பிரிந்தது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை நா.முத்துக்குமார் இரண்டு முறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கமீன்கள் படத்தில் முத்துக்குமார் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காகவும், சைவம் படத்தில் அழகே அழகு என்ற பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றார். கடந்த 2013-ம் ஆண்டில் மட்டும் 103 திரைப்பட பாடல்களை எழுதி நா.முத்துக்குமார் சாதனை படைத்துள்ளார்.

நா.முத்துக்குமார் – தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதங்கள்) என்ற மகளும் உள்ளனர்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த 1975-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை(2000-ம் ஆண்டு) படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அவர், சிறந்த பாடலாசிரியர் ஆனார். அவருடைய இறப்பு திரையுலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. முத்துக்குமார் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதிஉள்ளார். புத்தகங்களையும் எழுதிஉள்ளார். நா. முத்துக்குமார் இறப்பிற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நா.முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியளிக்கிறது என்று கங்கை அமரன் கூறிஉள்ளார். கவிஞர் நா.முத்துக்குமார் மரணம் எழுத்து உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று இயக்குநர் விக்ரமன் கூறிஉள்ளார். தமிழ் திரையுலகிற்கு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி சென்று உள்ளார் என்று திரைஉலகினர் கண்ணீர் மலங்க இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நா.முத்துக்குமார் மரணம் மிகுந்த வேதனையை தருகிறது என்று சமுத்திரகனி கூறிஉள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>