திருவாரூரில் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேரா. ஜெயராமன் கைது

z37

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவர் மனைவி சித்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விலைநிலங்களின் நடுவில் ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களாக தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் மற்றும் பல்வேறு கட்ட போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் போராட்டத்திற்கு பொதுமக்களை தூண்டுவதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த பகுதிக்குள் ஜெயராமன் வரக் கூடாது எனவும் காவல்துறை ஆணையிட்டிருந்தது.

இந்நிலையில் ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்துவதற்காக அப்பகுதி மக்களை அழைத்து வர இங்கு அவர் வந்திருந்தார். அவருடன் ஜெயராமன் மனைவி சித்ராவும் வந்திருந்தார், அவர்களை உடனடியாக காவலர்கள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியே சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதம் நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்ததையும் மீறி சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்த ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் இந்த பகுதியில் இருக்கிறாதா என ஆய்வு செய்வதாக கூறியுள்ளது. வேறு எந்த குழாயும் பதிக்கப்படவில்லை, இதனை எடுத்து கூறியும் பொதுமக்கள் போராட்டதை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளது. ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் பல ஏக்கர் விலைநிலங்கள் ஓஎன்ஜிசியால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விலைநிலங்களில் குழாய் பதிக்கக் கூடாது என டெல்டா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>