திருவனந்தபுரம் – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அந்த ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா மற்றும் காருகுட்டி நிலையங்களுக்கு நடுவே வந்துகொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது.இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என தகவல் தெரிவிக்கின்றன.

அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அந்த ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா மற்றும் காருகுட்டி நிலையங்களுக்கு நடுவே வந்துகொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது.இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என தகவல் தெரிவிக்கின்றன.

திருவனந்தபுரம்: மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 8.40 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு சென்றது. அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அந்த ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா மற்றும் காருகுட்டி நிலையங்களுக்கு நடுவே வந்துகொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. இந்த தகவலை அறிந்து விரைந்த ரயில்வே அதிகாரிகள் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என தகவல் தெரியவந்துள்ளது.

இந்த ரயிலில் இருந்த பயணிகளை மாற்று ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் எர்னாகுளம் மற்றும் திருச்சூர் நகரங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பெட்டிகள் தடம் புரண்டதால் சேதம் அடைந்த தண்டவாளங்களை சீரமைக்க சுமார் 10 மணிநேரம் ஆகலாம் என்பதால் எர்னாகுளம்-திரிச்சூர் வழிதடத்தில் செல்லும் அனைத்து ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம்-மும்பை, கன்னியாகுமரி-பெங்களூர், ஆலப்புழா-தன்பாத், திருவனந்தபுரம்-கோரக்பூர் ரப்திசாகர், திருவனந்தபுரம்-ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய தொலைதூர ரெயில்கள் திருநெல்வேலி-ஈரோடு மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளன. .

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>