திருமணம் செய்துகொண்டதால் வீரசைவ மடத்தின் இளைய மடாதிபதி நீக்கம்

முன்பு இந்த மடம் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்பது பக்தர்களுக்கு நன்றாகத் தெரியும். 97-வது மடாதிபதிக்கும் திருமணமாகி உள்ளது. இதுகுறித்த ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

முன்பு இந்த மடம் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்பது பக்தர்களுக்கு நன்றாகத் தெரியும். 97-வது மடாதிபதிக்கும் திருமணமாகி உள்ளது. இதுகுறித்த ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வீரசைவ மடத்தின் இளைய மடாதி பதி கங்காதாரன் அண்மையில் திருமணம் செய்துகொண்டதால், அவரை மடத்தில் இருந்து நீக்கி யுள்ளதாக மடத்தின் பெரிய மடாதிபதி நீலகண்ட தேசிகேந்திரர் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் வீரசைவ பெரிய மடத்துக்கு இலங்கை, கர்நாடகா, திருவாரூர், தாராசுரம் உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த மடம் சிங்காதன லிங்காயத் சமூகத்தைச் சோ்ந்ததாகும்.

இந்த மடத்தின் 97-வது பெரிய மடாதிபதியாக நீலகண்ட தேசிகேந் திரர் பொறுப்பு வகித்து வருகிறார். இளைய மடாதிபதியாக 2012-ல் பெங்களூருவைச் சோ்ந்த கங்கா தரன்(44) நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இளைய மடாதி பதி கங்காதரன் பெங்களூரு வில் திருமணம் செய்துகொண்ட தாகவும், மடத்தில் இருந்து பல ஆவணங்களை எடுத்துச் சென்ற தாகவும் புகார்கள் எழுந்தன. இதை யடுத்து, அவர் இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து பெரிய மடாதிபதி நீலகண்ட தேசிகேந்திரர் கூறியது: இந்த மடத்தில் பொறுப்புக்கு வருவோர் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால், கங்காதரன் கடந்த ஜூலை 11-ம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த மமதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, மீண்டும் கும்ப கோணம் மடத்துக்கு வந்துள்ளார்.

அவர் திருமணம் செய்து கொண்ட விவரம் அண்மையில்தான் தெரியவந்தது. இந்தத் தகவல் எனக்குத் தெரிந்தவுடன், யாரிட மும் சொல்லாமல் கங்காதரன் பெங்களூருவுக்குச் சென்றுவிட் டார். மேலும், மடத்தின் பல ஆவ ணங்களையும் கொண்டுசென் றுள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் செய்ய உள்ளோம் என்றார்.

மடாதிபதியும் திருமணம் ஆனவர்தான்

இதுகுறித்து விவரம் அறிய கங்காதரனை தொடர்புகொண்டு பேசியபோது, “முன்பு இந்த மடம் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்பது பக்தர்களுக்கு நன்றாகத் தெரியும். 97-வது மடாதிபதிக்கும் திருமணமாகி உள்ளது. இதுகுறித்த ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம், தன் மனைவிக்கு வீடு வாங்க ரூ.25 லட்சம் கேட்டார். போதிய அளவுக்கு பணம் இல்லை என்று நான் கூறியதால், என் மீது கோபம் கொண்டு, ஜூன் மாதம் 6-ம் தேதி என்னை மடத்தில் இருந்து நீக்கினார். பின்னர், நான் பெங்களூரு சென்று, என் உறவுக்காரப் பெண்ணை ஜூலை 11-ம் தேதி திருமணம் செய்துகொண்டேன். மடத்தில் ஏதாவது இருந்தால்தானே, அதை நான் எடுத்துச் செல்ல முடியும்?” என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>