திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம்: தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை

2016-10-12-14-18-59n

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டி நீக்கப்பட்டார். வருமானவரி சோதனையில் ரூ.194 கோடி சிக்கியதால் சேகர் மீது தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் பரிந்துரையால் அறங்காவலர் பதவிக்கு சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார்.

சேகர் ரெட்டியின் சென்னை வீடு, அலுவலகங்கள், காட்பாடி வீடு ஆகியவற்றிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டில் இருந்து ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ80 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் ஆகும். இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியபோது சவுகார்பேட்டை தரகர்கள் மூலமாக தம்மிடம் இருந்த ரூ80 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இன்று வேலூரில் சேகர் ரெட்டி காரில் ரூ.24 கோடி புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.24 கோடியும் வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்ட புதிய 2000 நோட்டுகள் ஆகும். சேகர் ரெட்டியின் சொந்த கிராமமான தொண்டான் துளசியில் காரில் பணம் இருந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>