திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் தேவை: சென்னையில் மூன்றாம் பாலினத்தோர் போராட்டம்

2016-21-9-19-21-50%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf

சென்னை: மூன்றாம் பாலினத்திற்கான பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருநங்கைகள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். திருநங்கைகள் உரிமைகள் தொடர்பாக மாநிலங்கள் அவையில் திமுக திருச்சி சிவா கொண்டுவந்த தனி நபருக்கான மசோதா கடந்த 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திருநங்கைகள் அமைப்புகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சென்னையில் உள்ள வள்ளுவர்கோட்டம் அருகில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த மசோதாவில் திருநங்கைகளுக்கு பாதகமாக அம்சங்கள் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினார். மசோதாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். மூன்றாம் பாலினத்திற்கான பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>